தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
அக்டோபர் 31ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது.
அமரன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் தான் எஸ்.கே. 23. இப்படத்தில் கன்னட இளம் நடிகை ருக்மிணி வசந்த் இணைந்து நடித்து வருகிறார்.
தளபதி விஜய்யின் GOAT திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றனர். ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.
சிவகார்த்திகேயனின் வீடு
இந்த நிலையில், திருச்சியில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சியில் இருக்கும் வீட்டின் வீடியோ தான் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Tirchy SK anna Home #RjNandhini 😍😍😍😍 @Siva_Kartikeyan pic.twitter.com/Db6ek0wzOq
— Harish (@h_a_r_is_) August 15, 2024