Saturday, October 5, 2024
Homeசினிமாநடிகர் நகுலை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய வீடியோ.... குற்றச்சாட்டு குறித்து பிரபலம்

நடிகர் நகுலை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய வீடியோ…. குற்றச்சாட்டு குறித்து பிரபலம்


நடிகர் நகுல்

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் நகுல்.

அதன்பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி என நடித்தவர் இரண்டு படங்களுமே நல்ல ஹிட் கொடுத்தது. இடையில் பல ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் நடிப்பில் கடைசியாக வாஸ்கோடகாமா படம் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர் நகுல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நடிகரின் பதிவு

வாஸ்கோடகாமா படத்தில் பணியாற்றிய உதவியாளர் சந்துரு, இந்த படத்தில் பணியாற்றிய போது நகுல் என்னிடம் காண்டம் வாங்கி வர சொன்னார், நான் வேலை இருக்கு முடியாது என்று கூறியிருந்தார்.

நடிகர் நகுலை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய வீடியோ.... குற்றச்சாட்டு குறித்து பிரபலம் | Actor Nakul Complaint Against Assistant Director

2வது முறை கேட்டார் அப்போதும் முடியாது என்றேன். இதனால் கோபமான அவர் நான் படப்பிடிப்பிற்கு வந்தால் நான் நடிகக வர மாட்டேன் என நகுல் பிரச்சனை செய்ததால் என்னை வாஸ்கோடகாமா படத்தின் கடைசி 10 படப்பிடிப்பிற்கு அழைக்கவில்லை.

இதனால் எனது 2 ஆண்டு உழைப்பு வீணாகிவிட்டது என கூறியிருந்தார்.

இதுகுறித்து நடிகர் நகுல் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், இப்பட இயக்குனர், நடிகைகள், என்னைப்பற்றி அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் இழிவாக பேசிவரும் சந்துரு மீது நடவடிக்கை எடுத்த வேண்டும், அவரின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் என நகுல் புகார் மனு அளித்துள்ளார். 

நடிகர் நகுலை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய வீடியோ.... குற்றச்சாட்டு குறித்து பிரபலம் | Actor Nakul Complaint Against Assistant Director

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments