நம் சினிஉலகம் Website-ல் திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் அடையாளங்களில் முக்கியமான நபராக இருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
நாகார்ஜுனா
தெலுங்கு திரையுலகில் அறிமுகமானாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் நாகார்ஜுனா. 64 வயதிலும் இளமையாக இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்து வருகிறார்.
1984ஆம் ஆண்டு லட்சுமி டகுபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நாகசைதன்யா எனும் மகன் பிறந்தார். பின் 1990ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
[7WRAQD ]
இதன்பின் 1992ஆம் ஆண்டு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் அகில். நாகார்ஜுனாவின் இரண்டு மகன்களும் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் நாகார்ஜுனாவின் தற்போதைய சொத்து மதிப்பு 3,010 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நாகார்ஜுனா சொந்தமான ரூ. 45 கோடி மதிப்புள்ள பங்களா இருக்கிறதாம். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 9 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.