நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த், ஒரு காலத்தில் எல்லா நடிகைகளும் உடன் நடிக்க ஆசைப்பட்டவர்.
இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வணிய ரீதியாக வெற்றி பெற்றது, அது மட்டும் இல்லாமல் இவரது படத்தில் ஏதாவது ஒரு பாடல் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டதாக இருக்கும்.
பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிப்பில் கடைசியாக ஹிட்டான படம் என்றால் அது வின்னர் தான். அதன்பிறகு நடிகர் பிரசாந்த் மார்க்கெட் அப்படியே சரிவை சந்தித்தது.
அதோடு அவர் 2005ம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார், ஆனால் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள்.
திருமண வாழ்க்கையால் நடிகர் பிரசாந்த் மன உளைச்சலுக்கு ஆளாக சில வருடங்கள் கேரமா பக்கம் வரலில்லை.
திருமண தகவல்
இந்த நிலையில் நடிகர் பிரசாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், 51 வயதாகும் பிரசாந்தின் திருமணம் பற்றி அவர், பிரசாந்த் நடிக்கும் படங்கள் வெளியானதும் பெண் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.
பிரசாந்த் வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லிவிட்டார். இந்த முறை நன்கு விசாரித்து பெண் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.