பிக் பாஸ் 8ம் சீசன் துவக்க நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த ஷோவுக்கு பிரபல நடிகர் ரஞ்சித் போட்டியாளராக வந்திருக்கிறார்.
மற்ற போட்டியாளர்களிடம் சகஜமாக பேசிய விஜய் சேதுபதி ரஞ்சித்தை பார்த்ததும் மிகவும் கோபமாக சில கேள்விகளை கேட்டார்.
ரஞ்சித் vs விஜய் சேதுபதி
VJS: நீங்கள் ஒரு படம் இயக்கி இருந்தீர்கள்.
Ranjith: கவுண்டம்பாளையம்.
VJS: அது இல்ல. பீஷ்மர்.. அது நல்ல படம். கவுண்டம்பாளையம் சர்ச்சை வந்த போது நீங்கள் பேசிய விதம்.. அப்படி ஒரு ரஞ்சித்தை நான் பார்த்தது இல்லை. அந்த ரஞ்சித் முற்றிலும் வேறொரு ரஞ்சித் ஆக தெரிந்தார்.
முன்பு படங்களில் இயல்பான நண்பனாக நடித்த நீங்கள் இப்போது இப்படி மாறிட்டிங்க. இது தான் உங்க இயல்பா. அல்லது நாங்க வேற மாதிரி நினைத்துக்கொண்டோமா?
Ranjith: நான் வைத்த விதை ஒன்னு, முளைத்த செடி ஒன்னு என எனக்கே தெரிந்தது.
VJS: இப்போது பாடம் கத்துக்கிட்டிங்க.
Ranjith: நிச்சயமா கத்துக்கிட்டேன்.
VJS: உங்க சட்டையில் இருக்கும் பூ.. உங்கள் மனதிலும் பூக்கட்டும் (என மறைமுகமாக தாக்கிய விஜய் சேதுபதி.)
ஆணவ கொலைகள் பற்றி ரஞ்சித் முன்பு சர்ச்சையாக பேசியதற்கு விஜய் சேதுபதி இப்படி மேடையில் தாக்கி இருக்கிறார். அவர் பேசிய விதம் பார்த்து ரஞ்சித்தின் முகம் மாறியதையும் பார்க்க முடிந்தது.