நடிகர் ரஹ்மான்
தமிழ் சினிமாவில் புதுப்புது அர்த்தங்கள், சங்கமம், ராம், உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரஹ்மான்.
ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
சிங்கம் 2, பில்லா, போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் மீண்டும் துருவங்கள் 16 படத்தின் மூலம் ஹீரோவாக சூப்பர்ஹிட் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகர் ரஹ்மான்.
நடிகர் ரஹ்மான் Meherunnisa என்பவரை 1993ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
ரஹ்மானின் மகள்
இந்த நிலையில், நடிகர் ரஹ்மானின் இளைய மகள் அலிஷா, சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் தற்போது இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணி ரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம்.
ஒரு நடிகையாக ஆக வேண்டும் என்பதுதான் இவரது எண்ணமாக இருந்தாலும் சினிமாவை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக தக் லைஃப் படத்தின் பணியாற்றி வருகிறார் என தகவல் கூறுகின்றனர்.