விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தும் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. சமீபத்தில் தான் விஜய்யின் பிறந்தநாள் அன்று இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
GOAT திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.ஏனென்றால் இப்படம் தான் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது. இப்படத்தை முடித்தபின் முழுமையாக அரசியலில் இறங்கவுள்ளாராம்.
விஜய்யுடன் அம்பிகா
80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அம்பிகா. இவர் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாள் அன்று இந்த புகைப்படத்தை வெளியிட்டு விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..