Saturday, March 15, 2025
Homeசினிமாநடிகர் விஜய்யை பாலோ செய்கிறாரா கீர்த்தி சுரேஷ்... இயக்குனர் ஒபன் டாக்

நடிகர் விஜய்யை பாலோ செய்கிறாரா கீர்த்தி சுரேஷ்… இயக்குனர் ஒபன் டாக்


விஜய்-கீர்த்தி

தமிழ் சினிமாவில் யார் நடிக்க வந்தாலும் உங்களின் பேவரெட் நடிகர் யார் என்று கேட்டால் உடனே அவர்கள் சொல்வது அஜித் அல்லது விஜய் தான்.

அப்படி தன்னை நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்று அடையாளப்படுத்தியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானவர் அடுத்தடுத்து ரஜினி முருகன், பைரவா, சாமி 2, தானா சேர்ந்த கூட்டம், தொடரி, சர்கார் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தவருக்கு தெலுங்கு அவர் நடித்த மகாநதி படம் பெரிய ஹிட் கொடுத்தது.

கடைசியாக கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

நடிகர் விஜய்யை பாலோ செய்கிறாரா கீர்த்தி சுரேஷ்... இயக்குனர் ஒபன் டாக் | Director Ponram About Vijay And Keerthy Suresh


இயக்குனர் பேட்டி


விஜய்யின் தீவிர ரசிகரான கீர்த்தி சுரேஷ் அவரை பாலோ செய்கிறார் அதிலும் ரஜினி முருகன் படத்தில் இடம்பெறும் உன் மேல ஒரு கண்ணு பாடலில் விஜய்யை இமிட்டேட் செய்தார் என்ற விமர்சனம் உண்டு.

நடிகர் விஜய்யை பாலோ செய்கிறாரா கீர்த்தி சுரேஷ்... இயக்குனர் ஒபன் டாக் | Director Ponram About Vijay And Keerthy Suresh

இதுகுறித்து ரஜினி முருகன் பட இயக்குனர் பொன்ராம் பேசுகையில், கீர்த்தி சுரேஷ் எனக்கு பிடித்த நடிகை, அவரிடம் மிகவும் பிடித்த விஷயமே அந்த மேனரிசம் தான்.

அந்த பாடலில் அவர் விஜய்யை ஃபாலோ செய்தார் என்று எல்லோரும் சொன்னார்கள், அது தவறான புரிதல் என்றுதான் நான் கூறுவேன். அதனால் தான் அந்த அந்த பாடலில் கீர்த்தியின் மேனரிசத்தை வைக்க சொல்லி பிருந்தா மாஸ்டரிடம் கேட்டோம்.

அவர் திறமையான நடிகை, யாரையும் ஃபாலோ செய்து அவர்களை போல் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்ததே இல்லை என்று கூறியுள்ளார். 

நடிகர் விஜய்யை பாலோ செய்கிறாரா கீர்த்தி சுரேஷ்... இயக்குனர் ஒபன் டாக் | Director Ponram About Vijay And Keerthy Suresh



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments