Tuesday, January 21, 2025
Homeசினிமாநடிகர் விஜய் ஆண்டனி கூறிய பதிலால் சர்ச்சை.. என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் விஜய் ஆண்டனி கூறிய பதிலால் சர்ச்சை.. என்ன சொன்னார் தெரியுமா?


முதலில் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி.



இதைத்தொடர்ந்து பிச்சைக்காரன்-2 படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறினார். சின்னத்திரையில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.


டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் என தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

அவர், 2012ல் வெளிவந்து நான் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் போன்ற படம் வெற்றியடைந்தது.

அதில் குறிப்பாக பிரச்சைக்காரன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்தநிலையில் நேற்று இவர் நடித்து வெளிவந்த படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

விஜய் ஆண்டனி பேச்சு

இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய் ஆண்டனி கடந்த சில நாட்களாக இசைவெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு, பட ப்ரோமோஷன் என எந்த விழாவிற்கு சென்றாலும், செருப்பு இல்லாமல் காணப்பட்டார்.



இதுகுறித்து தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்க, விஜய் ஆண்டனி அதற்கு, திடீரென எனக்கு அப்படி தோன்றியதால் செருப்பு இல்லாமல் நடந்து பார்த்தேன் அது எனக்கு பிடித்திருந்தது எனவும், எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது எனவும் கூறினார்.

நடிகர் விஜய் ஆண்டனி கூறிய பதிலால் சர்ச்சை.. என்ன சொன்னார் தெரியுமா? | Vijay Antony Talks About Walking Without Sandals



மேலும், மனத்திற்கு உத்வேகம் வேண்டுமா, மனம் சோர்வா இருக்கா, உங்களுக்குள் ஏதாவது மாற்றம் வேண்டுமா, அப்போ செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள் என்று கூறியிருந்தார். இது அவர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் மருத்துவ ரீதியாக சர்ச்சையை கிளப்பியது.

கிளம்பிய சர்ச்சை


இதற்கு மருத்துவர் ஒருவர் இணையத்தில், அக்லோஸ்டோமோ குடற்புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகையை உருவாக்கும் என்றும், இந்த ரத்த சோகையால் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பகால மரணம் தொடங்கி குழந்தைகள் மரணம் வரை ரத்தசோகை கொண்டுவந்துவிடும் என்றார்.


இதில் இருந்து தப்பிக்க செருப்பு அணிவது தான் சிறந்தது என்றும், சிலர் அரைகுறையாக எதையாவது தெரிந்து கொண்டு பேசுவதை நம்பி ரத்த சோகைக்கு ஆளாகாதீர்கள் என்று, மருத்துவர் விஜய் ஆண்டனியை குற்றம் சாட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments