விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். தற்போது அரசியலிலும் களமிறங்கிவிட்டார். தளபதி 69 படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார்.
விஜய் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் இப்படத்தை வெளியிடுகின்றனர். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
இப்படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதம் மூன்றாவது பாடல் வெளியாகும் என தகவல் கூறுகின்றனர். மேலும் இது குத்து பாடல் என்றும், இதில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
விஜய் கட்டும் தியேட்டர்
இந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லும் விஜய், பிரமாண்டமாக தியேட்டர் ஒன்று கட்டப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. ஆனால், எந்த இடத்தில் கட்டப்போகிறார் என சொல்லப்படாத நிலையில், தற்போது அதுகுறித்து தெரியவந்துள்ளது.
பாண்டிச்சேரியில் தான் நடிகர் விஜய் தியேட்டர் கட்டப்போகிறாராம். புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டுதலின்படி தான் பாண்டிச்சேரியில் விஜய் தியேட்டர் கட்டுகிறார் என கூறுகின்றனர்.