விஜய்-அஜித்
விஜய்-அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களாக உள்ளார்கள். ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்துவது விஜய்-அஜித்தின் படங்களின் வசூல் தான்.
இப்போது அஜித், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
அதேபோல் விஜய் சமீபத்தில் கோட் படத்தின் வேலைகளை முடித்துள்ளார், அடுத்து தனது 69வது படம், கடைசி படத்தை எப்போது தொடங்குவார் என தெரியவில்லை.
இன்று காலை முதல் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
பிரபலத்தின் பேச்சு
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா அஜித் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், அண்மையில் அஜித்திடம் விஜய் பற்றி அவரும் அரசியலுக்கு வந்துவிட்டார், நீங்க எப்போது என்று சும்மா கிண்டலாக கேட்டேன்.
அதற்கு அஜித் மூடிட்டு போ என சொல்லுவார். அஜித்துக்கு அரசியல் ஆர்வமே கிடையாது, அரசியல் பேச்சை எடுத்தாலே அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்.
அரசியல் பற்றி அவரது ஒரே பார்வை ஜனநாயக கடமையை ஆற்றுவது மட்டும்தான் என ரமேஷ் கண்ணா பேசியுள்ளார்.