விஜய்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய்.
இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியான படம் GOAT.
இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய் சினிமாவில் தனது ஆரம்ப காலத்தில் பெரும் கேலி, கிண்டலுக்கு உள்ளானார்.
அந்த வகையில், நடிகர் விஜய் நடித்து வெளிவந்த ஹிட் படங்கள் குறித்து கீழே காணலாம்.
ஹிட் படங்கள்
விக்ரமன் இயக்கத்தில் முதல் வெற்றி படமாக விஜய்க்கு அமைந்த படம் பூவே உனக்காக இந்த படத்தின் மூலம் பேமிலி ஆடியன்சை சம்பாதித்தார் விஜய்.பிறகு ,எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அடுத்த படம் கில்லி, இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வரை வசூலை பெற்ற முதல் படம் என்ற சாதனை படைத்தது.
அதற்கு பின், விஜய் அதிக ரசிகர்களை சம்பாதிக்க உதவிய படம் தெறி அட்லீ இயக்கத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் நடித்து மாஸ் காட்டி இருப்பார்.
பின், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் அவர் சினிமா கெரியரில் அதிக வசூல் அள்ளிய படம் என்ற பெருமையை தேடி கொடுத்தது.