பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆந்திராவில் அவரது சொந்த ஊரில் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
கை, கால் விழுந்துவிட்டது என கூறி அவர் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு முதல் ஆளாக அவருக்கு 2 லட்சம் ரூபாயை உதவியாக கொடுத்து இருக்கிறார்.
KPY பாலா உதவி
இதனை தொடர்ந்து விஜய் டிவி பிரபலம் KPY பாலா நடிகர் வெங்கல் ராவுக்கு பணம் அனுப்பி வைத்திருக்கிறார்.
தான் ஒரு லட்சம் ரூபாயை அவருக்கு கொடுத்து இருப்பதாகவும், நீங்களும் உதவுங்கள் என பாலா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.