Tuesday, February 11, 2025
Homeசினிமாநடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்.. போன் கால் செய்தது யார்? தீவிர விசாரணை

நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்.. போன் கால் செய்தது யார்? தீவிர விசாரணை


சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீசார் தீவிர பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவருக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இது போல ஏற்கனவே நடிகை கங்கனா ரனாவத்துக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் ஷாருக் கானுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலைமிரட்டல்

50 லட்சம் ருபாய் கேட்டு ஷாருக் கான் வீட்டுக்கு மிரட்டல் அழைப்பு வந்திருக்கிறது. அது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பணம்பறிக்க முயற்சி என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

அந்த கால் ட்ரேஸ் செய்தபோது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் சேர்ந்த முகமத் பைசான் என்ற வழக்கறிஞர் போனில் இருந்து வந்தது தெரியவந்தது. அது பற்றி விசாரிக்க அந்த ஊருக்கு தற்போது மும்பை போலீஸ் சென்று இருக்கிறது.

இந்நிலையில் முகமத் பைசான் கான் தன்னுடைய போன் நவம்பர் 2ம் தேதி தொலைந்துவிட்டதாக கூறி இருக்கிறார். அது பற்றி போலீசார் மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை மிரட்டல் வந்திருப்பதால் ஷாருக் கானுக்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்.. போன் கால் செய்தது யார்? தீவிர விசாரணை | Death Threat To Shah Rukh Khan

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments