Thursday, February 13, 2025
Homeசினிமாநடிகை அசினின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே.... மகளின் பிறந்தநாளை எங்கே கொண்டாடியுள்ளார் பாருங்க

நடிகை அசினின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே…. மகளின் பிறந்தநாளை எங்கே கொண்டாடியுள்ளார் பாருங்க


நடிகை அசின்

நடிகை அசின், தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு பிரபலம்.

விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த பிறகு தமிழ்நாட்டின் கனவுக் கன்னியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

ஜெயம் ரவியுடன் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, விஜய்யின் போக்கிரி, சிவகாசி, காவலன், அஜித்துடன் ஆழ்வார் மற்றும் வரலாறு, சூர்யாவுடன் கஜினி மற்றும் வேல் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து டாப் நாயகியாகவும் வலம் வந்தார்.

பின் கஜினி ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் பக்கம் சென்றவர் அங்கேயும் நடிக்க தொடங்க ஒரு கட்டத்தில் சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் போனது.

மகளின் பிறந்தநாள்

சினிமாவில் நடிப்பதை நிறுத்தியவர் கடந்த 2016ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

இவர்களுக்கு 2017ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தார், தற்போது அவருக்கு 7 வயது ஆகிறது.

நடிகை அசினின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே.... மகளின் பிறந்தநாளை எங்கே கொண்டாடியுள்ளார் பாருங்க | Actress Asin Daughter Birthday Celebration

இன்ஸ்டா பக்கம் வைத்திருந்தாலும் ஆக்டீவாக இல்லாத அசின் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

அப்படி தனது மகளின் 7வது பிறந்தநாளை வெளிநாடு சென்று கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அசின் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட அட இவரா மகளா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

நடிகை அசினின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே.... மகளின் பிறந்தநாளை எங்கே கொண்டாடியுள்ளார் பாருங்க | Actress Asin Daughter Birthday Celebration



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments