கத்ரீனா கைஃப்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைஃப். இவர் 2003ஆம் ஆண்டு வெளிவந்த பூம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் ரேஸ், Ek Tha Tiger, தூம் 3, Bang Bang, Tiger Zinda Hai, Tiger 3 என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார் எனது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மேரி கிறிஸ்துமஸ் எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், முன்னணி நடிகையாக பாலிவுட்டில் ஜொலித்து கொண்டிருக்கும் கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை கத்ரீனா கைஃப்பின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 263 கோடி இருக்கும் என தகவல் கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 கோடி முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.