நடிகர் சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களை பார்த்துக்கொள்ள லலிதா டி சில்வா என்ற பெண்ணை அவர்கள் பணியில் வைத்திருந்தனர்.
அந்த பெண்ணுக்கு மாத சம்பளமாக 2.5 லட்சம் ரூபாய் தரப்படுவதாக நீண்ட காலமாக ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. அது பற்றி அவரே தற்போது பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
2.5 லட்சம் சம்பளமா..
சைப் அலி கான் – கரீனா கடந்த 8 வருடமாக இருந்து வருகிறேன். குழந்தைகள் உடன் தான் 24×7 இருக்கிறேன். எப்போதும் என்னை வேறொருவர் போல நடத்தியது இல்லை.
நாங்கள் சாப்பிடும் உணவை தான் அவர்களும் சாப்பிடுவார்கள். பணியார்களுக்கு தனி உணவு என ஒன்று அந்த வீட்டில் இல்லை. சைப் அலி கான் சில நாட்களில் சமைத்து எல்லோருக்கும் கொடுப்பார் என அவர் கூறி இருக்கிறார்.
2.5 லட்சம் மாத சம்பளம் உண்மையா என கேட்டதற்கு, “2.5 லட்சமா.. உங்கள் வார்த்தை நிஜமாக வேண்டும் என நான் விரும்புகிறேன். இதெல்லாம் வெறும் வதந்தி தான்” என அவர் கூறி இருக்கிறார்.