நிச்சயதார்த்தம்
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாக சைதன்யாவிற்கு நடிகை சோபிதா துளிப்பாளாவுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலையில் இருந்து, இருவருக்கும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் என்கிற தகவல் இணையத்தில் உலா வந்தது. பல ஊடங்களிலும், குறிப்பாக தெலுங்கு ஊடகங்களில் இதுகுறித்து எழுதப்பட்ட நிலையில், வதந்தியாக இருக்கும் என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வந்தனர்.
ஆனால், தற்போது நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என மாப்பிளையின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனா அறிவித்துள்ளார்.
சோபிதாவின் தங்கை சமந்தா
இந்த நிலையில் சோபிதாவிற்கு தற்போது திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு முன்பே இவருடைய தங்கைக்கு திருமணம் முடிந்துவிட்டது. நடிகை சோபிதாவின் தங்கையின் பெயர் சமந்தா. இவர் மருத்துவர் ஆவார். இவருடைய திருமணம் கடந்த ஆண்டு மிகவும் விமர்சையாக நடந்துள்ளது.
தனது தங்கை சமந்தாவின் திருமண புகைப்படங்களை கூட சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை நீங்களே பாருங்க..