Saturday, March 15, 2025
Homeசினிமாநடிகை தமன்னா ஆன்ட்டி-யா..! இளம் நடிகையால் அதிர்ச்சியடைந்த தமன்னா.. வீடியோ இதோ

நடிகை தமன்னா ஆன்ட்டி-யா..! இளம் நடிகையால் அதிர்ச்சியடைந்த தமன்னா.. வீடியோ இதோ


நடிகை தமன்னா

நடிகை தமன்னா இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் Odela 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.

கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பயணித்து வரும் தமன்னா, படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவருடைய நடனம் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை தமன்னா ஆன்ட்டி-யா..! இளம் நடிகையால் அதிர்ச்சியடைந்த தமன்னா.. வீடியோ இதோ | Tamanna Says Dont Call Me Aunty To Rasha Thadani

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் துவங்கி ஸ்ட்ரீ 2 படம் வரை இவருடைய நடனத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமன்னாவின் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

நடிகை தமன்னா ஆன்ட்டி-யா..! இளம் நடிகையால் அதிர்ச்சியடைந்த தமன்னா.. வீடியோ இதோ | Tamanna Says Dont Call Me Aunty To Rasha Thadani

ஆன்ட்டி-னு அழைத்த நடிகை

இந்த நிலையில், நடிகை ரவீனா டாண்டனின் மகளும், 19 வயதான இளம் நடிகையுமான ராஷா ததானி தமன்னாவை ஆன்ட்டி என அழைக்க, பட்டென அவர் ராஷா ததானி தோள் மீது லேசான அடிபோட்டு ஆன்ட்டின்னுலாம் சொல்லக் கூடாது, என செல்லமாக கண்டித்துள்ளார் தமன்னா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments