தீபிகா படுகோனே
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்துவிடுகிறது.
அண்மையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என பலர் நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி.
இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் எல்லாம் ஆக்டீவாக கலந்துகொண்டார் தீபிகா படுகோனே.
இவர் 2018ம் ஆண்டு ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார், தற்போது 6 ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
லேட்டஸ்ட் போட்டோ
இந்த நிலையில் எம்பிராய்டரி புடவையில் இருக்கும் புதிய புகைப்படத்தை தீபிகா படுகோனே பதிவு செய்தார்.
ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவிற்கு அவர் அணிந்திருந்த ஆடை பற்றிய தகவல் தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
தோரானி என்ற பிராண்டின் ஹுக்கும் கி ராணி புடவையை தீபிகா அணிந்துள்ளார். இந்த புடவையின் விலை ரூ. 1.92 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த புடவையில் கையால் செய்யப்பட்ட எம்பிராய்டரி வேலைப்பாடுகள் உள்ளன, புடவை முழுவதும் உருவாக 3400 மணி நேரத்திற்கும் மேல் ஆனதாம்.