நயன்தாரா
நயன்தாரா, தென்னிந்திய சினிமா நாயகி லிஸ்டில் டாப்பில் இருக்கும் பிரபலம்.
இவர் கடந்த 2017ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு உயிர், உலக் என 2 மகன்கள் உள்ளனர்.
அண்மையில் நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது திருமண வீடியோ ஆவணப்படமாக நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற தலைப்பில் தயாராகி வெளியாகி இருந்தது.
இந்த ஆவணப்படம் வெளியாவதற்கு முன் நயன்தாரா வெளியிட்ட ஒரு அறிக்கை தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, அதற்கு இன்னும் தனுஷ் ஒரு பதிலும் அளிக்கவில்லை.
எத்தனை கோடி
காதல் முதல் கல்யாணம் வரையிலான வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆவணப்படம் நயன்தாராவின் 40ஆவது பிறந்தநாளான நவம்பர் 18ம் தேதி வெளியானது.
இந்த ஆவணப்படத்தை நெட்பிலிக்ஸ் ரூ. 25 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் ரூ. 80 முதல் ரூ. 100 கோடி வரையிலான மதிப்பில் தான் நெட்பிலிக்ஸ் வாங்கியிருப்பதாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.