ஷாலினி
குழந்தை நட்சத்திரமாக இருந்து பின், ‘அனியாதிபிராவு’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷாலினி. அதே படத்தை தமிழில் காதலுக்கு மரியாதை என்று ரீமேக் செய்யப்பட்டது.
அதிலும், விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இவர் நடித்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடித்திருப்பார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தான் ஷாலினியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் தான் அஜித்துக்கும் இவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
அதன் பின் சில படங்களில் மட்டும் நடித்த ஷாலினி அஜித்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி விட்டார்.
பாடகியா
இந்நிலையில், ஷாலினி நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் வலம் வந்துள்ளார் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா ? ஆம், அவர் ‘அமர்க்களம்’ படத்தில் இடம்பெற்ற ‘சொந்தக் குரலில் பாட’ என்ற பாடலை அவரது இனிமையான குரலில் பாடியுள்ளார்.
அதன் மூலம் தான் அஜித்துக்கு ஷாலினி மீது ஒரு ஈர்ப்பு வந்ததாம். இது தான் அவர் பாடிய முதல் மற்றும் கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.