Wednesday, September 11, 2024
Homeசினிமாநடிகை ஷ்ரத்தா கபூரின் காதலை நிராகரித்த பிரபல வாரிசு நடிகர்.. யார் தெரியுமா

நடிகை ஷ்ரத்தா கபூரின் காதலை நிராகரித்த பிரபல வாரிசு நடிகர்.. யார் தெரியுமா


ஷ்ரத்தா கபூர்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஸ்ட்ரீ 2. இதனுடைய முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்தது.


அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்தியளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகையான ஷ்ரத்தா கபூர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலை அந்த நடிகரிடமும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த நடிகர் ஷ்ரத்தா கபூரின் காதலை ஏற்றவில்லையாம். நிராகரித்துவிட்டதாக தகவல் கூறப்படுகிறது.

அந்த நடிகர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகர் வருண் தவான் தானாம். ஆம், வருண் தவானிடம் தான் தனது காதலை ஷ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ஆனால், அவர் அந்த காதலை ஏற்கமறுத்துள்ளார். இந்த விஷயம் இருவரும் சிறுவர்களாக இருக்கும்பொழுது நடந்ததாம்.

நோ சொன்ன வருண் 


ஷ்ரத்தா கபூர் தந்தை ஷக்தி கபூர் மற்றும் வருண் தவான் தந்தை டேவிட் தவான் படப்பிடிப்பிற்கு செல்லும்போது, தங்களுடைய பிள்ளைகளையும் அழைத்து செல்வார்களாம். அப்போது ஷ்ரத்தா கபூருக்கு 8 வயது தான். வருண் தவான் மீது ஷ்ரத்தா கபூருக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாம். இதனால் தனது காதலர் வருண் தவனிடம் கூறியுள்ளார். அதற்கு வருண் நோ என்றும் கூறிவிட்டாராம். இவ்வாறு கடந்த 2015ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் ஷ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.

நடிகை ஷ்ரத்தா கபூரின் காதலை நிராகரித்த பிரபல வாரிசு நடிகர்.. யார் தெரியுமா | Varun Dhawan Says No To Shraddha Kapoor Love

நடிகர் வருண் தவானுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நடாஷா என்பவருடன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments