மாளவிகா மோகனன்
மலையாள படங்களில் அறிமுகமாகி அதன்பிறகு தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் மாளவிகா. இவர் மாஸ்டர், பேட்ட போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதை தொடர்ந்து அவர் தங்கலான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது அந்த படம் ஆகஸ்ட் 15 வெளிவர இருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
பேட்டி
அப்போது ஒரு பேட்டியில் பேசிய மாளவிகா தனக்கு வைல்ட் லைப் போட்டோகிராபி என்றால் மிகவும் பிடிக்கும் என்றும். ஒருவேளை அவர் நடிக்கவராமல் இருந்திருந்தால் அவர் போட்டோகிராபராக இருந்துருப்பார் எனவும் கூறியுள்ளார்.
தற்போது அவருக்கென இன்ஸ்டா பக்கத்தில் வைல்ட் லைப் போட்டோகிராபி பக்கம் இருப்பதாகவும், அதில் அவர் நிறைய புகைப்படங்கள் பதிவு செய்திருக்கிறார் எனவும் கூறியிருந்தார். மாளவிகாவுக்கு இப்படி ஒரு பொழுதுப்போக்கு இருப்பதை கேட்டு அனைவரும் வியந்து விட்டனர்.