ரேகா கிருஷ்ணப்பா
மலையாளத்தில் சேச்சி அம்மா என்ற சீரியல் மூலம் முதன்முறையாக நடிக்க தொடங்கியவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.
முதல் தொடரிலேயே வில்லியாக நடிக்க தொடங்கியவர் பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் நடித்து வந்தார்.
தமிழில் பாரிஜாதம் என்ற தொடர் மூலம் அறிமுகமானவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் தான் பெரிய ரீச் கொடுத்தது.
அதன்பின் நந்தினி, தமிழும் சரஸ்வதியும், ஜீ தமிழ் சீரியல்கள் என தொடர்ந்து நடித்தார். தனது கணவருடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
நடிகையின் பேட்டி
தனது சினிமா பயணம் குறித்து சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், சீரியலில் நடித்துக்கொண்டிருந்த போது நிறைய பட வாய்ப்புகள் வந்தது, ஆனால் அப்போது சீரியல் போதும் என இருந்தேன்.
ஆனால் ஒரு கட்டத்தில் சீரியலில் வரும் கதாபாத்திரம் எல்லாமே ஒரே மாதிடிர எனக்கு இருக்க சீரியலில் பிரேக் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் ஒரு 3 வருடம் சீரியலை விட்டு விலகி சினிமாவில் நடிக்க தொடங்கினேன்.
அந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தேன். அதற்குப் பிறகு இப்போது மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.