Friday, September 20, 2024
Homeசினிமாநண்பர்கள் என்று கூறிவிட்டு இப்படி பழகுவார்கள்.. வெளிப்படையாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் மகள்

நண்பர்கள் என்று கூறிவிட்டு இப்படி பழகுவார்கள்.. வெளிப்படையாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் மகள்


ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கத்தீஜா

தனது இசையால் பலரின் மனதை வென்று இன்றும் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். பல விருதுகளுக்கும், புகழுக்கும் சொந்தமான இவர் இந்த ஆண்டு வெளிவந்த ராயன், அயலான் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார்.


இவரது மகள் கத்தீஜாவின் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மின்மினி. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், கத்தீஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

நண்பர்கள் என்று கூறிவிட்டு இப்படி பழகுவார்கள்.. வெளிப்படையாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் மகள் | Khatija Rahman About Her Friends

கத்தீஜா பேட்டி


அந்த பேட்டியில், ரஹ்மான் சாரின் மகள் என்பதால் உங்களிடம் வந்து பலர் பேசுவார்களே அதை எப்படி நீங்கள் அடையாளாம் கண்டு பிடிப்பீர்கள், என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சிறுவயதில் முதல் எண்னிடம் பலர் வந்து பேசுவர், ஆனால் நான் அவர்கள் டைப்பாக இருக்கமாட்டேன், இருப்பினும் நான் ரஹ்மான் மகள் என்பதற்காக பழகுவார்கள் அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

நண்பர்கள் என்று கூறிவிட்டு இப்படி பழகுவார்கள்.. வெளிப்படையாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் மகள் | Khatija Rahman About Her Friends


ஆனால், தற்போது நான் இசையமைத்த படம் வெளிவந்த நிலையில், முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரோகினி திரையரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் என்னை ரஹ்மான் மகள் என்று பார்க்காமல் கத்தீஜாவாக பார்த்தார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என அந்த பேட்டியில் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments