நடிகர் சூரி பல படங்களில் வசனம் கூட இல்லாமல் கூட்டத்தில் நிற்பவராக வர தொடங்கி, அதன் பின் காமெடியனாக ஜெயித்து, தற்போது ஹீரோவாகவும் படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார்.
தற்போது அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் அதில் வரும் ‘நம்பிக்கை விடாமுயற்சி’ பாடலுடன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
நம்பிக்கை விடாமுயற்சி
சுவற்றில் பெயிண்ட் அடிக்கும் நபராக பணியாற்றி அதன் பிறகு தற்போது நடிகராக ஜொலிப்பதை அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
“சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!” என அவர் கூறியுள்ளார்.