Sunday, December 8, 2024
Homeசினிமாநம்புங்க.. நான் சின்ன பொண்ணு தான்! பிரிகிடா தன் உண்மையான வயது பற்றி கொடுத்த விளக்கம்

நம்புங்க.. நான் சின்ன பொண்ணு தான்! பிரிகிடா தன் உண்மையான வயது பற்றி கொடுத்த விளக்கம்


நடிகை பிரிகிடா பவி டீச்சர் ஆக நடித்து இணையத்தில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு அவர் சினிமாவில் அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் உடன் மாஸ்டர், பார்த்திபனின் இரவின் நிழல் போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தார்.

வயது

தன்னை திரையில் பார்ப்பவர்கள் எல்லாம் பிரிகிடாவுக்கு 30 வயது இருக்கும் என பேசுகிறார்கள் என வருத்தமாக சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார்.

நான் பவி டீச்சர் ஆக நடிக்கும் போது 19 வயது தான். காலேஜ் தான் படித்துக்கொண்டிருந்தேன். அதற்கு பிறகு நடித்த ரோல்கள் எல்லாம் mature ஆக இருந்ததால் எனக்கு வயது அதிகம் என எல்லோரும் நினைக்கிறார்கள் என அவர் ஆதங்கம் தெரிவித்து இருக்கிறார்.

தற்போது அவர் நடித்து உள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தில் தான் வயதுக்கு ஏற்ற ரோல் கிடைத்து இருக்கிறது என்றும் அவர் கூறி உள்ளார். 

நம்புங்க.. நான் சின்ன பொண்ணு தான்! பிரிகிடா தன் உண்மையான வயது பற்றி கொடுத்த விளக்கம் | Brigida Saga Talks About Her Real Age

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments