நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் தற்போது திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும்பட்சத்தில் இவர் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையை உடைத்த பத்திரிகையாளர்கள்
இவர் படப்பிடிப்பில் தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வைத்திருக்கும் நபர்களுக்கு, தன்னுடன் வரும் துணை ஆட்களுக்கு நயன்தாரா சம்பளம் கொடுக்க மாட்டாராம். அப்படத்தின் தயாரிப்பாளர் தான அதற்கும் சம்பளம் தருவாராம்.
இந்த தகவலை கேள்விப்பட்ட பலரும், இது என்னடா கொடுமை என கூறி வருகிறார்கள். மூத்த பத்திரிகையாளர்களான அந்தணன் மற்றும் பிஸ்மி இருவரும் தான் இதுகுறித்து பேசியுள்ளார்கள்.
நயன்தாரா மட்டுமின்றி பாலிவுட் நடிகை கங்கனாவும் தமிழில் சந்திரமுகி படத்தில் நடித்தபோது கூட இப்படி தான் செய்தாராம். தன்னுடன் படப்பிடிப்பிற்கு வரும் நபர்களுக்கு தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என கண்டிஷன் போட்டதாக பத்திரிகையாளர்கள் பிஸ்மி மற்றும் அந்தணன் கூறியுள்ளனர்.
மேலும் இதுபோன்ற விஷயங்கள் தமிழ் சினிமாவில் மட்டும் தான் நடக்கிறது. மலையாளத்தில் எல்லாம் இப்படி நடக்கவே நடக்காது. அங்கு நடிகர்களுக்கு சம்பளம் என்று பேசிவிட்டால் அவ்வளவு தான். அவர்கள் அழைத்து வரும் துணை ஆட்களுக்கு எல்லாம் அவர்களே தான் செலவு செய்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.