கோலமாவு கோகிலா
தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் கோலமாவு கோகிலா.
இப்படத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்தது.
நெல்சன் திலீப்குமார் போட்ட திட்டம்
இப்படத்தில் நயன்தாரா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் நடித்திருந்தார். இந்த நிலையில், கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவேண்டும் என ஆசையில் இருந்தாராம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவேண்டும் என்றும், அதில் நயன்தாராவிற்கு பதிலாக ஆலியா பட்-ஐ கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தாராம்.