ஷாருக்கான்
அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் டுங்கி. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜ்குமார் இராணி இயக்கியிருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது ஷாருக்கான் நடிப்பில் கிங் எனும் திரைப்படம் உருவாகி வருகிறதாம். இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் ராஜ்குமார் இராணி உடன் இணைய முடிவு செய்துள்ளாராம் நடிகர் ஷாருக்கான்.
சமந்தா
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கப்போகிறார் என பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடிகை சமந்தா பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஷாருக்கான் உடன் அவர் இணைந்து நடித்தால் கண்டிப்பாக அவருக்கு இந்தியில் மார்க்கெட் பெரிதாகும் என பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.