Monday, April 21, 2025
Homeசினிமாநயன்தாரா, தனுஷ் பிரச்சனையில் நடிகைக்கு சப்போர்ட் செய்தது ஏன்?- பார்வதி ஓபன் டாக்

நயன்தாரா, தனுஷ் பிரச்சனையில் நடிகைக்கு சப்போர்ட் செய்தது ஏன்?- பார்வதி ஓபன் டாக்


நயன்தாரா-தனுஷ்

நடிகை நயன்தாரா சில வாரங்களுக்கு முன் ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டார்.

அதில் தனது திருமண வீடியோவில் நானும் ரவுடித்தான் பாடலை பயன்படுத்த அப்பட தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினோம்.

சில வருடங்களே ஆகிவிட்டது, ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எனவே எங்களது திருமணம் வீடியோ டிரைலரில் நானும் ரவுடித்தான் பாடலை அதுவும் BTS வீடியோவை பயன்படுத்தி இருந்தோம்.

அந்த வீடியோவிற்கு நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார், அவர் இதற்காக கண்டிப்பாக நீதிமன்றம் ஏறுவார் அதனை சந்திக்கவும் நாங்கள் தயார் என கூறியிருந்தார்.

அவரது அறிக்கை வெளியானதும் நடிகை பார்வதி, நஸ்ரியா என பலர் ஆதரவு தெரிவித்தார்கள்.


பார்வதி ஓபன் டாக்


நடிகை நயன்தாராவிற்கு பிரச்சனையில் சப்போர்ட் செய்தது ஏன் என ஒரு பேட்டியில் பார்வதியிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், நயன்தாரா போஸ்ட் பார்த்ததும் ஷேர் செய்ய வேண்டும் என தோன்றியது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமாவில் தனக்கென இடத்தை பெரும் போராட்டம் நடத்தி தானே உருவாக்கியவர்.

அவர் அதிகம் பேட்டி கொடுக்க மாட்டார், அவரே தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து 3 பக்கம் ஓபன் லெட்டர் எழுதும்போது எனக்கு அவருக்கு சப்போர்ட் செய்ய தோன்றியது. அவர் சொல்வதில் ஒரு வேல்யூ இருக்கிறது என கூறியுள்ளார். 

நயன்தாரா, தனுஷ் பிரச்சனையில் நடிகைக்கு சப்போர்ட் செய்தது ஏன்?- பார்வதி ஓபன் டாக் | Parvathy Opens Up About Nayanthara Dhanush Issue

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments