Saturday, January 18, 2025
Homeசினிமாநயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2.. ஆனால் ஆர்.ஜே. பாலாஜி இல்லை! ஏன் தெரியுமா

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2.. ஆனால் ஆர்.ஜே. பாலாஜி இல்லை! ஏன் தெரியுமா


மூக்குத்தி அம்மன் 2

கடந்த 2020ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

இப்படம் OTT தளத்தில் வெளிவந்தது.

வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்து இருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 உருவாகுகிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆர்.ஜே. பாலாஜி இல்லை



ஆனால், அந்த அறிவிப்பில் இயக்குனர் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. அதே போல் ஆர். ஜே. பாலாஜியின் பெயரும் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை.

காரணம் மூக்குத்தி அம்மன் 2 படம் பண்ணலாம் என முடிவு செய்து, மூக்குத்தி அம்மன் தலைப்பை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுள்ளார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் தர மருத்துள்ளது.

அதனால், ஆர்.ஜே. பாலாஜி தான் இயக்கும் படத்திற்கு ‘மாசாணி அம்மன்’ என தலைப்பு வைத்துவிட்டாராம். இதற்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு சம்மந்தம் இல்லை. மேலும் மாசாணி அம்மன் படத்திற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும், இப்படத்தில் திரிஷா நடிக்கிறார் என்கிற தகவலும் வெளிவந்தது.

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2.. ஆனால் ஆர்.ஜே. பாலாஜி இல்லை! ஏன் தெரியுமா | Rj Balaji Out Of Mookuthi Amman 2 Reason



இந்த நிலையில், பாலாஜியின் மாசாணி அம்மன் படம் குறித்து தகவல் வெளிவர, திடீரென மூக்குத்தி அம்மன் 2 படத்தை நாங்கள் தான் எடுக்கிறோம், என வேல்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்டு, இப்படத்தில் நயன்தாரா தான் நடிக்கிறார் என கூறியுள்ளனர்.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் சக்தி என்பவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments