Monday, March 17, 2025
Homeசினிமாநயன்தாரா நடிக்க வேண்டிய படம்.. ஆனால், அந்த இடத்தை பிடித்த தமன்னா

நயன்தாரா நடிக்க வேண்டிய படம்.. ஆனால், அந்த இடத்தை பிடித்த தமன்னா


நயன்தாரா 

நடிகை நயன்தாரா தமிழில் முதன் முதலில் சரத்குமாரின் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி, அஜித்துடன் பில்லா என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் நயன்தாரா பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களை மிஸ் செய்துள்ளார்.

அப்படி இவர் மிஸ் செய்த திரைப்படம் தான் பையா. கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான இப்படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். வித்தியாசமான காதல் கதையில் உருவான இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

நயன்தாரா நடிக்க வேண்டிய படம்.. ஆனால், அந்த இடத்தை பிடித்த தமன்னா | Tamannaah Replaced Nayanthara In Paiyaa Movie

நயன்தாரா இடத்தில் தமன்னா 

இப்படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடித்திருப்பார். சொல்லப்போனால் தமன்னாவிற்கு அடையாளத்தை பெற்று தந்தது தமிழ் திரைப்படங்களில் பையாவும் ஒன்றாகும். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம்.

நயன்தாரா நடிக்க வேண்டிய படம்.. ஆனால், அந்த இடத்தை பிடித்த தமன்னா | Tamannaah Replaced Nayanthara In Paiyaa Movie

ஆனால், கடைசி நிமிடத்தில் சில விஷயங்கள் இயக்குநருக்கும் நயன்தாராவிற்கும் ஒத்துப்போகவில்லை. அதனால் நயன்தாராவிற்கு பதிலாக தமன்னாவை இப்படத்தில் கமிட் செய்துள்ளனர். இதனை இயக்குநர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments