சினிமா நடிகைகளுக்கு தங்கள் அழகு மேல் எப்போதும் ஒரு கண்ணு உண்டு, அந்த அழகை அதிகரிக்கும் வகையில் தங்கள் உடல்களில் டாட்டூ குத்திக் கொள்வதை பல நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், கோலிவுட் நடிகைகள் குத்திய டாட்டூஸ் பற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் குறித்தும் கீழே காணலாம்.
சமந்தா :
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு டாட்டூ என்றால் மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தால் முன்னால் கணவர் நாக சைதன்யா பெயரை தனது இடுப்பில் டாட்டூ குத்தி இருந்தார் பிறகு அதனை எடுத்து விட்டார்.
திரிஷா:
நடிகை திரிஷா அவரது ராசி குறித்த ஒரு டாட்டூவை கையில் குத்தி உள்ளார். பின், அவருக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான நீமோ மீனை நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார்.
மேலும், சினிமா மீது அவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது முதுகில் கேமராவை டாட்டூ குத்தி உள்ளார்.
நயன்தாரா:
தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களை கொண்டு புகழின் உச்சத்தில் இருப்பவர் நயன்தாரா. இவர் தன் கையில் முதலில் பிரபுதேவா என்று பச்சை குத்தி வைத்திருந்தார் பிறகு அதனை மாற்றி பாசிடிவிட்டி என்று பச்சை குத்தி உள்ளார்.
ஸ்ருதிஹாசன் :
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதிஹாசன்.
இவர் தமிழ் மேல் உள்ள பற்றை வெளிப்படுத்தும் வகையில் முதுகில் தமிழ் கடவுள் முருகனின் வேல் டிசனையும் ஷ்ருதி என்று தனது பெயரையும் பச்சை குத்தி உள்ளார்.
வரலட்சுமி சரத்குமார் :
வரலட்சுமி சரத்குமார் தனது முதுகில் பெரிய டிராகன் டாட்டூ ஒன்றையும், கையில் இரண்டு முகமூடிகள் கொண்ட டாட்டூவையும் குத்தி உள்ளார்.
குஷ்பு:
குஷ்பு அவரது உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தி உள்ளார் குறிப்பாக தனது இரண்டு மகள்களான அனந்திதா, அவந்திகா பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார்.