Tuesday, February 18, 2025
Homeசினிமாநாக சைதன்யா - சோபிதா இதுபோன்ற திருமணத்தை விரும்பவில்லை.. போட்டுடைத்த நாகார்ஜுனா

நாக சைதன்யா – சோபிதா இதுபோன்ற திருமணத்தை விரும்பவில்லை.. போட்டுடைத்த நாகார்ஜுனா


நாக சைதன்யா – சோபிதா

தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்தை அறிவித்து சில வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது நாக சைதன்யா அவரது புது காதலியான நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார்.

நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் நாகார்ஜுனா, நாக சைதன்யா – சோபிதா திருமணம் குறித்து பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

போட்டுடைத்த நாகார்ஜுனா  

அதில், “என் மகன் மற்றும் மருமகளுக்கு ஆடம்பரமான இந்திய திருமணத்தில் விருப்பமில்லை. அதனால் திருமணம் குறித்து அனைத்தையும் அவர்களே பார்த்து கொள்வதாக கேட்டு கொண்டனர்.

நாக சைதன்யா - சோபிதா இதுபோன்ற திருமணத்தை விரும்பவில்லை.. போட்டுடைத்த நாகார்ஜுனா | Nagarjuna Opensup About His Son

நான் அதை கேட்டு தயவு செய்து செய்யுங்கள் என்று கூறினேன். என் மகன் திருமணத்தில் பாரம்பரிய திருமண சடங்குகள் மற்றும் புனித மந்திரங்கள் இடம்பெற வேண்டும் என்பதை நான் விரும்பினேன். அது போன்று தான் என் மருமகள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமும்” என்று பகிர்ந்துள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments