நடிகர் நாக சைதன்யா அவரது புது காதலி சோபிதா துளிபாலா உடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.
நடிகை சமந்தாவை காதல் திருமணம் செய்து சில வருடங்களிலேயே விவாகரத்து செய்த அவர், மீண்டும் இன்னொரு நடிகையை திருமணம் செய்வதாக அறிவித்து இருப்பது பற்றி இணையத்தில் பல்வேறு விதமான கருத்துகள் இருந்து வருகிறது.
சமந்தா போட்ட பதிவு வைரல்
இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய நடுவிரலை காட்டி ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். Now We Are Free என்ற பாடலையும் அந்த பதிவில் இணைத்து அவர் போட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
நாக சைதன்யாவுக்கு பதிலடியாக தான் இப்படி ஒரு பதிவை போட்டாரா சமந்தா என அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.