நாக சைத்தன்யா
தமிழ் சினிமாவில் நாக சைத்தன்யா மிகவும் பிரபலம் ஆனது நடிகை சமந்தாவால் தான் என்றே கூறலாம்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருவரும் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் ஏற்பட திருமணம் செய்தார்கள்.
கோலாகலமாக நிச்சயதார்த்தம், கோவாலில் திருமணம் என கொண்டாட்டமாக நடந்தது.
20173ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் சில காரணங்களால் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். நாக சைத்தன்யா-சமந்தா பிரிந்தது அவர்களை தாண்டி ரசிகர்களுக்கு சோகமான விஷயமாக அமைந்தது.
நிச்சயதார்த்தம்
தற்போது நடிகர் நாக சைத்தன்யா, நடிகை சோபிதாவை காதலிக்க இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள். ஆகஸ்ட் 8ம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் நிச்சயதார்த்த தேதிக்கு பின்னால் இருக்கும் ஸ்பெஷல் விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 08.08.2024, ஜோதிட ரீதியாக சக்திவாய்ந்த நிகழ்வாக கருதப்படும் லயன்ஸ் கேட் போர்டல் நேற்று தான் திறந்தது.
பூமியானது சிரியஸ் நட்சத்திரத்துடன் இணையும் போது லயன் கேட் போர்ட்டல் திறக்கப்படுகிறது., தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான தனித்துவமான வாய்ப்பை உருவாக்குகிறது.
வானத்தில் பிரகாசமான நட்சத்திரமான சிரியஸ் இந்த காலகட்டத்தில் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கிறது என பிரபல ஜோதிடர் கூறியுள்ளார்.