சோபிதா துலிபாலா
ஹிந்தியில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை சோபிதா துலிபாலா.
2016ம் ஆண்டு நடிக்க தொடங்கியவர் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ், ஆங்கிலம் என 12 படங்கள் நடித்துள்ளார்.
அதோடு சில வெப் சீரியஸ்கள் நடித்துள்ள சோபிதா இந்த வருடம் கல்லி 2898 ஏடி படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகை தீபிகா படுகோனேவிற்கு டப் செய்து டப்பிங் கலைஞராகவும் கலக்கியுள்ளார்.
படங்களை தாண்டி இவர் நிறைய போட்டோ ஷுட்கள் மூலமாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
அன்ஸீன் போட்டோ
நடிகை சோபிதாவிற்கு ஆகஸ்ட் 8ம் தேதி நடிகர் நாக சைத்தன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை சோபிதாவின் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
அதில் அவரின் முக அமைப்பு வட்டமாகவும், மூக்கு, உதடு அமைப்பு என அனைத்துமே முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
சோபிதாவின் பழைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்போது உள்ள நடிகையா இது என ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.