Friday, December 6, 2024
Homeசினிமாநானும் 4 பேரை கூட்டிட்டு வரட்டுமா.. கதறிய ஜாக்குலின்! பிக் பாஸ் வீட்டில் பெண்கள் சண்டை

நானும் 4 பேரை கூட்டிட்டு வரட்டுமா.. கதறிய ஜாக்குலின்! பிக் பாஸ் வீட்டில் பெண்கள் சண்டை


பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கியதில் இருந்தே பெண் போட்டியாளர்கள் நடுவில் தொடர்ந்து பிரச்சனை
நடந்து வருகிறது.

குறிப்பாக ஜாக்குலின் தான் மற்றவர்கள் உடன் சண்டை போட்டு வருகிறார். பெண்கள் அறையில் தூங்காமல் அவர் வெளியில் தான் தூங்கி வருகிறார்.

பவித்ரா உடன் சண்டை

இன்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் டீமில் இருந்து ஒருவர் பெண்கள் டீமுக்கும், அதே போல பெண் ஒருவர் ஆண்கள் பக்கம் செல்ல வேண்டும் என சொல்லப்பட்டது.

அதில் பவித்ராவை ஆண்கள் பக்கம் அனுப்பினால் அவரை எல்லோரும் பாவமாக பார்ப்பார்கள் என பெண்கள் டீம் பேசும்போது கூறப்பட்டது. அப்படி எல்லாம் யாரும் பாவம் பார்க்க தேவை இல்லை என ஜாக்குலின் கூறினார்.

அதன் பிறகு நடந்த வாக்கெடுப்பில் பவித்ராவுக்கு கேப்டன் தர்ஷிகா ஆதரவாக வாக்களித்தார். அவர் உங்க friend என்பதால் இப்படி சப்போர்ட் பண்றீங்களா என ஜாக்குலின் அவரிடம் வாக்குவாதம் செய்தார்.
 

நானும் 4 பேரை கூட்டிட்டு வரட்டுமா.. கதறிய ஜாக்குலின்! பிக் பாஸ் வீட்டில் பெண்கள் சண்டை | Bigg Boss 8 Jacquline Vs Pavithra Fight

இந்த வாக்குவாதம் முற்றி பவித்ரா அழுதுகொண்டே சென்றுவிட்டார். அதன் பின் அவரை சமாதானப்படுத்தி ஆண்கள் நீ தான் போக வேண்டும் என அனுப்பி வைத்தனர்.

நானும் 4 பேரை கூட்டிட்டு வந்து விளையடட்டுமா..

அதன் பிறகு கேப்டன் தர்ஷிகாவிடம் ஜாக்குலின் பேசும்போது. நீங்க ரெண்டு பேரும் வெளியில் friends என்பதால் இப்படி செய்கிறீர்கள்.


அதற்காக நானும் எனக்கு தெரிந்த 4 பேரை கூட்டிட்டு வந்து கேம் விளையாடட்டுமா என கேள்வி கேட்டார் ஜாக்குலின். தர்ஷிகா ஒருதலைப்பட்சமாக இருப்பதை ஜாக்குலின் தட்டி கேட்டு சண்டை போட்டு அதன் பின் பாத்ரூம் சென்று கதறி அழுதார்.
 

நானும் 4 பேரை கூட்டிட்டு வரட்டுமா.. கதறிய ஜாக்குலின்! பிக் பாஸ் வீட்டில் பெண்கள் சண்டை | Bigg Boss 8 Jacquline Vs Pavithra Fight

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments