மகாராஜா
குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். இப்படம் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பின் நித்திலன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் மகாராஜா. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்க நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம் புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. முதல் மூன்று நாட்களில் வசூலில் சாதனை படைத்த மகாராஜா திரைப்படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
[W94JSP ]
அதன்படி, விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா கடந்த நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 38 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ. 50 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.