Friday, February 7, 2025
Homeசினிமாநான் அந்த இடத்தில் இருக்கும் போதே இறக்க வேண்டும், எனது கடைசி ஆசை இதுதான்... ஷாருக்கான்...

நான் அந்த இடத்தில் இருக்கும் போதே இறக்க வேண்டும், எனது கடைசி ஆசை இதுதான்… ஷாருக்கான் பேச்சு


ஷாருக்கான்

பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என கொண்டாடப்படும் டாப் நடிகர் ஷாருக்கான்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்தவர்களில் இவரும் முக்கியமானவர்.

ஏற்கெனவே சில படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் பெற்றிருக்கும் இவர் அட்லீ இயக்கத்தில் ஐவான் என்ற படத்தில் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

பல விருதுகளுக்கு சொந்தக் காரரான ஷாருக்கானுக்கு சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


நடிகரின் பேச்சு


விருதை பெற்றுக்கொண்ட ஷாருக்கானிடம், நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், ஆம் நான் மரணிக்கும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

எனக்கு யாராவது ஆக்ஷன் சொல்ல வேண்டும், அப்போது நான் இறப்பது போல் நடிக்க வேண்டும். ஆனால் ஆக்ஷ்ன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் மீண்டும் எழுந்திருக்க கூடாது, நான் அப்படியே இறந்து போயிருக்க வேண்டும்.

இதுதான் என் வாழ்நாள் கனவு என கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். 

நான் அந்த இடத்தில் இருக்கும் போதே இறக்க வேண்டும், எனது கடைசி ஆசை இதுதான்... ஷாருக்கான் பேச்சு | Shahrukh Khan Last Wish About His Life



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments