Friday, February 7, 2025
Homeசினிமாநான் அழகாக இல்லை என தோன்றியது.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகை சாய் பல்லவி

நான் அழகாக இல்லை என தோன்றியது.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகை சாய் பல்லவி


சாய் பல்லவி

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. மருத்துவருக்கு படித்த இவர் சினிமா மேல் உள்ள ஆசையால் நடிக்க வந்து விட்டார்.

அழகான சிரிப்பு, சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்த இவர் நடிப்பில் அடுத்த வாரம் 31 – ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று அமரன் படம் வெளியாக உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்து என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை வைத்து இந்த அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது.

தற்போது, இந்த படம் தொடர்பாக பல்வேறு பேட்டிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர்.

பேட்டி 

அதன்படி, பேட்டி ஒன்றில் சாய் பல்லவி அமரன் படம் குறித்து பல தகவலை பகிர்ந்துள்ளார். அதில், “நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க யோசித்தபோது இயக்குனர் என்னிடம் அமரன் படத்தின் கதையை கொண்டு வந்தார்.

நான் கதையை படித்து விட்டு எளிமையாக உள்ளதாக கூறினேன். அதற்கு இயக்குனர் உண்மையான இந்து கதாபாத்திரத்தை பார்த்த பிறகு முடிவெடுக்கச் சொன்னார். அதன் பின் தான் நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நான் அழகாக இல்லை என தோன்றியது.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகை சாய் பல்லவி | Sai Pallavi About Amaran Movie

மேலும், நான் அழகாக இருக்கிறேன் என்று என் அம்மாவை தவிர்த்து யாரும் கூறியதில்லை. சிறு வயதில் என் முகத்தில் இருக்கும் முகப்பருவை பார்த்துவிட்டு பெரியவர்கள் ஏன் உன் முகம் இவ்வாறு உள்ளது என்று கேட்பார்கள்.

அதனால் நான் அழகாக இல்லை என்று எனக்கு தோன்றி உள்ளது. தற்போது, என் புகைப்படத்தை நிறைய பேர் அவர்களது டிஸ்பிளே பிக்சராக வைத்துள்ளனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன்” என்று கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments