மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
இதை தொடர்ந்து தற்போது, இவர் இயக்கத்தில் ஆகஸ்ட் – 23 வெளிவந்த படம் வாழை.
அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து வாழை படம் எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
வெறித்தனமான விஜய் ரசிகன்
இந்த நிலையில், மாரி செல்வராஜ் பற்றிய சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அவர் வெறித்தனமான விஜய் ரசிகராம்.
இதுகுறித்து பேசிய அவர், விஜய் நடித்த மதுரை படம் வெளிவந்த நாளில் நான் கல்லூரியில் சேர்வதற்கான தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதி முடித்துவிட்டு நான் படம் பார்க்க செல்ல நேரம் ஆகிவிட்டது. அப்போது, ஓடும் பஸ்ஸிலிருந்து நான் விறுவிறுப்பாக சென்ற போது தியேட்டருக்கு முன் இருந்த குழியில் விழுந்து எழுந்து அப்படியே படம் பார்க்க சென்றேன்’ என கூறியுள்ளார். அந்த அளவிற்கு அவர் ஒரு மிகப்பெரிய விஜய் ரசிகராக இருந்துள்ளார்.