ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக ‘சைரன்’ படம் வெளியாகி இருந்தது, அடுத்ததாக ‘ஜெனி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘பிரதர்’ போன்ற படங்கள் வெளியாக உள்ளது.
அந்த வரிசையில் தற்போது, ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள பிரதர் படம் அக்டோபர் 31 – ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ‘மக்காமிஷி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜெயம் ரவி பேச்சு
இந்நிலையில், புரோமோசன் பணிகளில் படக்குழு மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “பிரதர் படம் என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மிகவும் பொருந்தி போகும். இந்த படத்தில் இருக்கும் காட்சிகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நியாபகப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.
என் அக்காவுக்கு சிறு வயது முதல் ஒரு பழக்கம் உண்டு அவங்க மனதில் ஏற்பட்ட காயத்தை லெட்டராக எழுதி கொடுப்பார். அதை படிக்கும்போது தான் நான் தவறு செய்து விட்டேன் என்று தோன்றும்.
என் சினிமா வாழக்கை பற்றி மற்றவர்கள் கூறும் கருத்தை கேட்டு கொண்டு அதன்படி நடப்பேன். ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதை பெரிதாக நான் கண்டு கொள்ளமாட்டேன்” என்று கூறியுள்ளார்.