நாயகன் படம்
கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் முதன்முறையாக ஒரு படம் உருவானது என்றால் அது நாயகன் தான்.
கடந்த 1987ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு இளையராஜா தான் இசை, இப்போதும் இப்பட பாடல்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவருமே மக்களுக்கு நன்றாக நியாபகத்தில் இருப்பார்கள், அந்த அளவிற்கு படம் கொண்டாடப்படுகிறது.
நாயகன் படத்தில் கமலின் மகளாக நடித்தவர் தான் நடிகை கார்த்திகா.
லேட்டஸ்ட் போட்டோ
அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் பேசப்பட்ட இவர் பிரபல இயக்குனர் பாஷீல் இயக்கிய பூ விழி வாசலிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
நாயகன் படத்திற்கு பிறகு தமிழில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் மலையாள படங்களில் நடித்து வந்தார். பின் 1988ம் ஆண்டு சுனில்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
இந்த நிலையில் நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வர அட நாயகன் பட நடிகையா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள் ரசிகர்கள்.