இந்தியன் 2
கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தின் மூலம் ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். 5 வருட கடின உழைப்பிற்கு பின் இப்படம் நாளை ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வில்லனாக எஸ். ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ப்ரீ புக்கிங்
இந்தியன் 2 திரைப்படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் கடந்த மாதம் துவங்கியது. USA உள்ளிட்ட பல இடங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் நாளை வெளிவரவிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியன் 2 திரைப்படம் உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 16 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் ரூ. 70 லட்சத்தை கடந்துள்ளது. இது அக்ஷய் குமாரின் சர்ஃபிரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூலை விட அதிகம் என சொல்லப்படுகிறது.