பிரபல நடிகர்
மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர் என கலக்கியவர் நடிகர் சைன் டாம் சாக்கோ.
அந்த மொழிகளில் நிறைய படங்கள் நடித்தவர் தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் இப்படத்தில் நடித்த தனக்கு சிறிய கேரக்டரே கொடுக்கப்பட்டதால் அந்த படம் குறித்தும் அதில் கதாநாயகனாக நடித்த விஜய் குறித்தும் கிண்டலாக கருத்து தெரிவித்து பின்னர் மன்னிப்பும் கேட்டார்.
அதன்பின் தசரா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.
திருமணம்
கடந்த வருட இறுதியில் இவருக்கும் தனுஜா என்கிற மாடல் அழகிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நீண்ட வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த இவர்கள் காதலர்களாக மாற திருமணம் செய்ய முடிவு செய்தார்கள்.
அண்மையில் ஒரு பேட்டியில் சைன் டாம் சாக்கோ பேசும்போது, தான் இப்போது சிங்கிளாக இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். தற்போது மீண்டும் டேட்டிங் ஆப் பக்கம் கவனத்தைத் திருப்பி பெண் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.