Friday, April 18, 2025
Homeஇலங்கைநியாயமான விலையில் தரமான உணவு – உணவகங்களை நிறுவும் புதிய வேலைத்திட்டம்

நியாயமான விலையில் தரமான உணவு – உணவகங்களை நிறுவும் புதிய வேலைத்திட்டம்


தரமான உணவை நியாயமான விலையில் வழங்குவதற்கான உணவகங்களை நிறுவும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல்மாதம் முதலாம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது.

இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments