வயநாடு
கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து தான் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.
அந்த இடத்தில் இருந்து வரும் வீடியோக்கள், புகைப்படங்களை பார்த்து மக்கள் பதறிப்போயுள்ளனர்.
பலர் உயிரிழந்துள்ளனர், வயநாடு மக்கள் நிலச்சரிவு தாக்கத்தில் இருந்து எப்படி வெளியே வரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
அரசும், தன்னார்வலர்களும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார்கள்.
நடிகை உதவி
பிரபலங்கள், சாதாரண மக்கள் என நேரில் சென்று உதவ முடியவில்லை என்றாலும் நிதியுதவி செய்து வருகிறார்கள்.
அப்படி சமீபத்தில் நடிகை நவ்யா நாயரும் நிதிஉதவி செய்துள்ளார்.
தற்போது குமுளி பகுதியில் ஒரு படப்பிடிப்பில் நவ்யா நாயர் கலந்து கொண்டிருப்பதால் தன்னால் நேரில் செல்ல முடியவில்லை என்று கூறி தனது மகன் மற்றும் பெற்றோர் மூலம் நிவாரண நிதி வழங்கிய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நவ்யா நாயர்.